சபை உறுப்பினர்கள் மற்றும் வரலாறு

1871-ஆம் ஆண்டில் கட்டப்பட்டு 26.04.1897-ல் திருநிலைப்படுத்தப்பட்ட இவ்வாலயம் 1971-ஆம் ஆண்டில் நூற்றாண்டை கண்டு, 145-ஆம் ஆண்டை 26.04.2016-ல் நிறைவு செய்ய உள்ளது. 2005-ல் (124-வது ஆண்டு) ஆலயம் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்படும் இவ்வாலயம் 145-ம் ஆண்டை நிறைவு செய்யபோகும் இந்நாட்களில் விரிவாக்கம் செய்யப்பட்டு அழகு நிறைந்ததாக அநேகர் கண்களில் ஆலய கோபுரத்தில் விண் தூதர்கள் (Angels) காட்சி தந்திருப்பது பெரிய சாட்சியாகும்.

12.10.1826-ல் பிறந்து 20.02.1889-வரை வாழ்ந்து தஞ்சையில் ஊழியம் செய்த Rev.C.A OUCHTER LONY - EV.Lutheran Missionary இவ்வாலயம் கட்டப்பட முக்கிய காரணகர்த்தாவாக இருந்துள்ளார். இவருடைய மரணத்திற்கு முன்னதாகவே 1871-ல் தூயதேற்றரவாளன் ஆலயம் திருநிலைப்படுத்தப்பட்டுள்ளது. தான் கண்ட கனவு நிறைவேறியது என்ற மகிழ்ச்சியோடு சமாதானத்தோடு கர்த்தரின் கரத்தில் தன் ஆவியை ஒப்பிவித்திருக்கிறார்.

1706 ஜூலை திங்கள் 9-ஆம் நாள் Rev. சீகன் பால்கு அவர்கள் அப்போதைய தஞ்சை மாவட்டம் தரங்கம்பாடி வந்து சேர்ந்து நற்செய்திப்பணியை துவக்கிய 250வது ஆண்டை நினைவு கூறும் வகையில் (1706-1956) இவ்வாலயத்தில் வழிபாடு நடத்தி நினைவுக்கல்லும் நிறுத்தப்பட்டுள்ளது.

14.01.1919-ல் இவ்ஆலயத்தில் கூடிய சினோடு கூட்டத்தில்தான் (Synod) மிசினரி நிர்வாக அமைப்பில் இருந்த திருச்சபை தன்னாட்சிபெரும் தமிழ் சுவிசேஷ லூத்தரன் திருச்சபை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தமிழர் திருநாளான தை மாதம் முதல் நாள் ஜனவரி 14-ஆம் நாள் தமிழ் சுவிசேஷ லூத்தரன் திருச்சபையின் பிறந்தநாளாயிற்று திருச்சபை பிறந்த இடம் தூயதேற்றரவாளன் ஆலயம் தஞ்சாவூராகும்.

தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை உதயமான 60-ஆம் ஆண்டை நினைவு கூறும்படி 19.1.1979-ல் வைரவிழா (Diamond Jubile) வழிபாடும், விழாவும் நடத்தி நினைவுக் கல்லும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆயர் அருட்பொழிவு, பிரசங்கிமார் திருநிலைப்படுத்துதல், தியாக்கோனிய தாயார் (Deaconess Mother) அருட்பொழிவு போன்ற சிறப்பு நிகழ்வுகளும் இங்கு நடைபெற்றுள்ளது.

இவ்வாலயத்தில் கடவுளின் திட்டத்தின்படி 1919 ஜனவரி 14-ல் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை என அருவிக்கப்பட்டு தோன்றிய திருச்சபை வளர்ச்சி அடைந்து நூறாவது ஆண்டை 2019 ஜனவரி 14-ல் காண இருப்பது கடவுளின் பெரிதான கிருபையே.

பல வெளிநாட்டு (ஜெர்மன், சுவிடன்) மிஷினரிகள் ஊழியம் செய்த இவ் ஆலயத்தில் 1899லிருந்து தமிழ் ஆயர்கள் ஊழியம் செய்ய ஆரம்பித்தனர். திருச்சபையை தோற்றுவித்த இந்த ஆலயத்திற்குட்பட்ட குருசேகரத்திலிருந்து தான் இத்திருச்சபையின் 7ஆம் பேராயரையும் தெரிந்து கொள்ள கடவுள் கிருபை செய்தார்.

திரு. ஜெயபால்

சபை குரு

திரு. P. ஜெயபால்

செல் : 9865058731

திரு. சார்லி மனோகர்

செயலாளர்

திரு. S. சார்லி மனோகர்

செல் : 9443985709

திரு. ஜவகர்

பொருளாளர்

திரு. A. ஜவகர்

செல் : 9842416207

சபை உறுப்பினர்கள்- பிசி

  • திரு. அ.மோகன்குமார் சாம்சன்

  • திரு. ஜெ.ரெனால்ட் ஜெயசேகரன்

  • திரு. வி.ஜெயபால்

  • திரு. டே.காட்வின் லின்ஸே

  • திரு. டே.ஜேயபிரகாஷ்

  • திரு. டே.விஜயகுமார்

  • செல்வி. ப .கிரனேப்பு

பெண்கள் ஐக்கிய சங்கம்

செல்வி. ப. கிரனேப்பு

தலைவர்

செல்வி. ப. கிரனேப்பு

திருமதி. ரூபா ஜெயபால்

செயலாளர்

திருமதி. ரூபி ஜெயபால்

திருமதி. ஏஞ்சல் சத்யவதி்

பொருளாளர்

திருமதி. A. ஏஞ்சல் சத்தியவதி