ஆலயம் பற்றி

தொலைநோக்குப் பார்வை

தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சையில் 26.4.1871ல் மங்களப்படைப்பு செய்யப்பட்டு டி.இ.எல்.சி தூய தேற்றரவாளன் தேவாலயம் இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் பேரன்பையும் மீட்பையும் அனைவரும் பெற்று வாழ சான்றாக ஜெர்மனி லூத்தரன் அருட்பணியாளர்களால் (Evangelical Lutheran Missionaries) கட்டப்பட்டது.

1706 ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 9ம் நாள் தரங்கம்பாடி துறைமுகத்தில் வந்து இறங்கிய அருட்பணியாளர் பர்தலேமேயு சீகன்பால்கு அவர்களின் நற்செய்தி பணியினால் ஆண்டவரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் அன்பினால் மீட்கப்பட்ட மக்கள், பிதா - குமாரன் - பரிசுத்த ஆவியரகிய திருத்துவ தெய்வத்தை வழிபட இவ்வாலயம் கட்டப்பட்டது.

"வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்கு கொடுக்கபட்டிருக்கிறது" (மத்தேயு 28:18) என்ற திருமறை வசனத்தின்படி கடவுளின் வல்லமை நிறைந்த ஆலயமாகவும், "இதோ உலகத்தின் முடிவுபரியந்த சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்" (மத்தேயு 28:20) என்ற வாக்குறுதிக்கு உண்மையாகவும் இத்தேவ ஆலயம் இருந்து வருகிறது. ஜாதி, சமய, இன, மொழி வேறு பாடின்றி அனைவரையும் அன்போடு ஆசிர்வதிக்கும் ஆண்டவர் இயேசு கிருஸ்துவின் பேரிரகத்தையும், பேரருளையும் இந்த தேவஆலயத்தில் பெற்றுக்கொள்வது உறுதியிலும் உறுதி. உண்மையிலும் உண்மை.

மேற்கொண்டபணி

மனுக்குலத்தின் நலவாழ்விற்காக செய்யப்படும் கடவுளின் அன்பு நிறைந்த நற்பணி. மனிதனின் அன்பு மாறிப்போகலாம், கடவுளின் அன்பு ஒருபோதும் மாறாது. யோவான் நர்சிநூல் 3:16ல் "கடவுள் தம் முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும் படிக்கு அவரை (இயேசுகிறிஸ்து) தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

கடவுளின் இந்த அன்பை உலகத்திற்கு அறிவிக்கவே அருட்பணி (மிச்சியன்) தோன்றியது. இவ்வருட்பணி பல நிலைகளிலே மேலை நாட்டின் கிறிஸ்துவ மிஷன் நிறுவனங்களால் இந்தியாவின் பல பகுதிகளிலும் தொடங்கப்பட்டு இன்று வரையிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. கல்விப்பணி, மருத்துவப்பணி, சமூக பொருளாதார மேம்பாட்டுப்பணி, கலை இலக்கியப்பணி போன்றவை சிறப்பானவைகளாகும். 1706ஆம் ஆண்டில் தரங்கம் பாடி வந்தடைந்த சீகன்பால்கு கல்வி பணியில் குறிப்பாக பெண்கள் கல்வி பயில பள்ளிகளைத் திறந்ததுமட்டுமல்ல தங்கி பயில பெண்களுக்கென்று விடுதிகளை (போர்டிங்) அமைத்தார். தஞ்சாவூர் தூய தேற்றரவாளன் ஆலயத்தை சார்ந்த ஆரம்ப நடுநிலை மேல் நிலைப்பள்ளிகளும், மாணவியர் விடுதியும் இவ்வருட்பணிக்கு நற்சான்றாகும். கிராமங்களிலும் வாழும் மக்கள் கடவுளின் அன்பை ரசிக்கும் படியாகவும், வழிப்ப்படும் படியாகவும் கிராமங்களிலும் பள்ளிக் கூடங்களும், சிற்றாலாயங்களும் கட்டப்பட்டுள்ளன.

இயேசுகிறிஸ்து மனிதர்கள் மேல்வைக்கும் அன்பிற்கும், இரக்கத்திற்கும் எடுத்துக்காட்டாய் கைவிடப்பட்ட பெண்கள், வியாதியுற்ற பெண்கள் இவர்களையும் சிறு குழந்தைகளையும் பராமரித்து சேவைசெய்யவும் "தியாக்கோணி" ஊழியம் திருசபையில் தோற்று விக்கப்பட்டு இப்பணி நிறுவனம் தஞ்சையிலிருப்பது நற்செய்திப்பணிக்கு நல்லதொரு சாட்சியாகும்.