நற்சாட்சி

என் மகளின் ஞானஸ்தான பெயரை சொல்லி அழைக்காமல் செல்லப் பெயரைச் சொல்லி கூப்பிட்டோம், கர்ப்பத்தின் கனியை எதிர்பார்த்து என் மகளுக்காக ஜெபிக்கும் படி என் சகோதரியும் நானும் ஜெபித்த வேளையில், என் மகளின் ஆசிவாதத்திற்குத் தடையாக உள்ள காரியத்தைக் கர்த்தர் வெளிபடுத்தினார். பரிசுத்த ஆலயத்தில் ஞானஸ்நானத்தின் போது பெயரிட்ட பெயரை விட்டுவிட்டு மற்ற பெயரை வைத்து கூப்பிடுவது ஆசீர்வாதம் பெற தடையாக உள்ளது என்று வெளிபடுத்தப்பட்டது. அன்று முதல் பரிசுத்த ஆலயத்தில் பெயரிட்ட பெயரை கூப்பிட்டோம். கர்த்தர் அற்புதமாக கர்ப்பத்தின் கனியை ஒரு ஆண் குழந்தையைக் கொடுத்தார், ஸ்தோத்திரம.

S. சின்னத்தம்பி - மதுரை

என் அக்கா மகளுக்கு வேலையில் மாற்றத்தையும், அதற்காக அரசாங்கம் ஒப்புதல் கிடைக்கவும் ஜெபிக்க கேட்டுக் கொண்டேன். கர்த்தர் கிருபையாக ஜெபத்தைக் கேட்டு மாறுதலும், ஒப்புதலும் கிடைக்க செய்தார். கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை. ஆமென்..

திருமதி. குளோரி - தஞ்சை

என் கணவருடைய தங்கையின் கணவருக்கு (நாத்தனார்) நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று ஜெபிக்க கேட்டேன். பாரத்துடன் ஜெபித்தார்கள், கர்த்தர் கிருபையாய் இரங்கி ஒரு நல்ல வேலைக்கிடைக்கச் செய்தார். பரிசுத்த நாமத்திற்கு மகிமையுண்டாவதாக, ஸ்தோத்திரம்.

A. ஏஞ்சல் சத்தியவதி - தஞ்சை
* = முக்கியமானவை